தேனியில் மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்களின் முன்னெடுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக பள்ளிகள் திறக்கபடாமல் இருப்பதால் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைகாட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கபட்டு வருகிறதுஆனால் இவ்வழிக்கல்வி முறையானது வாழ்வாதாரத்தை இழந்த மாணவர்களுக்கும், மலைபிரதேசத்தில் வாழும் மாணவர்களுக்கும் கிடைப்பதில் பெருஞ்சிக்கல் நிலவுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் அதற்கான மாற்று வழியை நாடிய தேனி பழனியப்பா மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் இருக்கும் பகுதிக்கே நேரடியாகச் சென்று பாடம் எடுத்து வருகின்றனர்.
தேனி அருகில் உள்ள உப்பார்பட்டியில் உள்ளது பழனியப்பா மேல்நிலை பள்ளி. கொரோனா சூழல் காரணமாக நெடுநாளாக பள்ளி மூடப்பட்டு இருந்த நிலையில், மாணவர்களுக்கு கல்வி வழங்கத் திட்டமிட்ட இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இருக்கும் பகுதிக்கேச் சென்று, மாணவர்கள் பாடம் நடத்துவதற்கான ஒரு இயற்கைச் சூழலை உருவாக்குகின்றனர். அதன் பின்னர் மாணவர்களை சமூக இடைவெளிப்படி அமர வைக்கும் அவர்கள் தினமும் 2 மணி நேரம் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர். இதன் மூலம் கிராமத்தைச் சுற்றியுள்ள 6 கிராம மாணவர்கள் பயனடைகின்றனர்.
இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி கூறும் போது “ வசதி இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இம்முறையினை கையாள்கிறோம் என்றார். இது குறித்து மாணவிகள் கூறும் போது “
ஆசிரியர்களே நேரடியாக வந்து பாடங்கள் நடத்துவதன் மூலமாக, அனைத்து பாடங்களையும் எளிதாக புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர்.