”ஸ்டெர்லைட்டும் வேண்டாம், ஆக்ஸிஜனும் வேண்டாம்” -துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சகோதரி

”ஸ்டெர்லைட்டும் வேண்டாம், ஆக்ஸிஜனும் வேண்டாம்” -துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சகோதரி
”ஸ்டெர்லைட்டும் வேண்டாம், ஆக்ஸிஜனும் வேண்டாம்” -துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சகோதரி
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிப்பதை கண்டித்து பாத்திமா நகர் பகுதி பொதுமக்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். 

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பலியான கிளாஸ்டனின் சகோதரி செய்தியாளர்களிடம் கூறும் போது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த செய்தி எங்களுக்கு மிகவும் மனக்கவலையை தருகிறது. இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப அறிகையில் மக்கள் மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும் வேண்டாம் ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் தயாரிக்கப்படும் ஆக்சிஜனும் எங்களுக்கு வேண்டாம். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் எங்களுக்கு அனுமதி தர வேண்டும்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com