ஒருமணி நேரத்தில் வேலையை விட்டு நீக்கி விடுவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

ஒருமணி நேரத்தில் வேலையை விட்டு நீக்கி விடுவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
ஒருமணி நேரத்தில் வேலையை விட்டு நீக்கி விடுவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
Published on

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைமைச் செயலக ஊழியர்களும் இன்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், எந்த நிபந்தனையும் இல்லமாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் நீதிபதிகள் இன்று வலியுறுத்தினர். மேலும், “நீதிமன்ற உத்தரவை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நீதிமன்றம் அறிகிறது. போராட்டத்தை வாபஸ் பெற்றால், அரசு ஊழியர்களின் 4 அம்ச கோரிக்கைகள் குறித்து தலைமைச் செயலரை அழைத்து செப்டம்பர் 18 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவோம். நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று கூறினர்.

நேரில் ஆஜரான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளிடம் நீதிபதிகள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர். மேலும், போராட்டம் வாபஸ் தொடர்பாக ஒரு மணி நேரத்தில் முடிவை தெரிவிக்குமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com