”நீர்நிலைகளை பாதுகாக்க அர்பணிப்பபோடு செயல்படுகிறோம்”- நீதிமன்றத்தில் தலைமை செயலர் அறிக்கை

”நீர்நிலைகளை பாதுகாக்க அர்பணிப்பபோடு செயல்படுகிறோம்”- நீதிமன்றத்தில் தலைமை செயலர் அறிக்கை
”நீர்நிலைகளை பாதுகாக்க அர்பணிப்பபோடு செயல்படுகிறோம்”- நீதிமன்றத்தில் தலைமை செயலர் அறிக்கை
Published on

நீர்நிலைகளை பாதுகாக்கவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு தமிழக அரசு செயல்பட்டுவருகின்றது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்ததார். அதன்படி தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு விரிவான அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், “குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நீர்வள ஆதராங்களை பெருக்கி அதன்மூலம் வீட்டு உபயோகம், வேளாண்மை, தொழில்சாலைகள் பயன்பாட்டிற்கான நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும்; நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றி வருவதகாவும், கடந்த 2020ம் ஆண்டே இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள பிற விவரங்கள்: “மத்திய மாநில அரசின் பரிந்துரைகளின்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பதிவுசெய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவிதி மின்இணைப்பும் தரக்கூடாது - ஊரக வளர்ச்சித் துறை கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்ககூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது.

இவற்றுடன் நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கைமுடிவு எடுக்கப்பட்டு, கடந்த ஜீலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில் மாநிலம் முழுவதும் ஒரேகட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள், குளங்களை உள்ளுர் விவசாயிகள் இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்க உள்ளோம்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து  அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமல்லாமல், நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்தது போல் பேணவும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும். நீர்நிலைகளை தூர்வாரி உரிய முறையில் பராமரித்து பழைய நிலைக்கே கொண்டு வந்து  பாதுகாக்கப்படும். சென்னையைப் பொறுத்தவரை நீர்நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு, மழைகாலங்களில்  வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாதபடி   உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சென்னையில் கடந்த மாதம் நான்குமுறை பெய்த கனமழையால் 1000 மில்லி மீட்டருக்கு மேல் மழை இருந்தது என்பதால், வெள்ளத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார் தலைமை செயலர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com