’’புதிய கட்சி, புதிய கூட்டணிகளால் எங்களுக்கு பயமில்லை’’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ

’’புதிய கட்சி, புதிய கூட்டணிகளால் எங்களுக்கு பயமில்லை’’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ
’’புதிய கட்சி, புதிய கூட்டணிகளால் எங்களுக்கு பயமில்லை’’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

புதிய கூட்டணிகள் உருவாகலாம், அதைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியது அவர், ’’தேர்தல் நேரத்தில் யார், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அதை தடைபோட முடியாது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை கட்சியை பதிவு செய்யவில்லை. சில தினங்களுக்கு முன்பு அவர் பெயரில் வந்த கட்சி தொடர்பாக கூட நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பிறகு தான் கட்சி பெயர், சின்னம் என்று தெரிவித்துள்ளனர்.

அவர் கட்சியை பதிவு செய்து சின்னம் பெற்று, தேர்தல் நேரத்தில்  யாருடனும் கூட்டணி சேரலாம். இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணிகள் மாறலாம். புதிய கூட்டணிகள் உருவாகலாம். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவை பொறுத்தவரை மக்களுடன் தான் கூட்டணி.இதனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.

2016 தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நின்று ஜெயிக்க முடியும் என்று நிரூபித்த கட்சி அதிமுக. அதிமுக தலைமையை ஏற்று விரும்பிய சேருகின்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்.உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி பற்றி பேசவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார். திமுகவின் ஊழலை ஒழிக்க தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. அதேபோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இயக்கமும் அதிமுக தான். எனவே ஊழலை ஒழிக்க வேறு கட்சி தேவையில்லை அதிமுக போதும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com