“நவ.9,10,11ஆம் தேதிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

“நவ.9,10,11ஆம் தேதிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
“நவ.9,10,11ஆம் தேதிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
Published on

வடகிழக்கு பருவமழை மீட்புப்பணி தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அடுத்தடுத்த நாள்களில், அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி அதிகனமழை பெய்தால், அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். நவ.9,10,11ஆம் தேதிகளில் மிகவும் எச்சரிக்கை தேவையென கூறியுள்ளனர். ஆகவே அதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தன்னார்வ நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உதவ களத்திற்கு வர வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். வரும் 10ஆம் தேதி அதிகனமழை பெய்தால் எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை சென்னையில் 16 சுரங்கப் பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்ததால் மழை நீரை வெளியேற்றுவதில் சிக்கல் உள்ளது. அதற்கான வழிகளையும் கண்டறிந்துவருகிறோம். கடலோர மாவட்டங்களில் முகத்துவாரங்களின் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பிரதான நீர் வழித்தடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் "மழையை எதிர்கொள்ள திமுக அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை" என்ற கண்டனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “கடந்த ஆட்சியை விட தற்போது சிறப்பாக பணியாற்றி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com