சசிகலா குடும்பத்தை வெளியேற்றி விட்டால் இரு அணியினரும் அண்ணன் -தம்பிகள் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, க்ரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர் அகற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அண்ணன் தம்பிகளுக்குள் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு மீண்டும் சுமூகமாகும்போது சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளப்படும். எங்கள் கோரிக்கையை ஏற்று சசிகலா பேனர்களை அகற்றியது பேச்சுவார்த்தையின் முதல் நடவடிக்கை. தொடர்ந்து எங்களுடைய எண்ணங்கள் நிறைவேற்றபட்டு வருகிறது. சசிகலா குடும்பத்தை அகற்றினால் நாங்கள் எல்லாம் அண்ணன் -தம்பிகள். கருத்துவேறுபாடுகளை முதலில் அகற்றி விட வேண்டும். சுமூகமான சூழல் அமையும் போது பேச்சுவார்த்தை நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் எண்ணம் உள்ளவர்கள் எதிரணியிலும் உள்ளனர். சின்னத்தைப்பெற தேர்தல் கமிஷனுக்கே பணம் கொடுத்து கட்சியை வளைக்கப்ப்பார்த்திருக்கிறார் டிடிவி.தினகரன். அவரைக் கைது செய்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது’ என அவர் தெரிவித்தார்.