சென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு
சென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு
Published on

நெம்மெலி உப்புநீக்கும் ஆலை மூடப்படும் என்பதால் சென்னையின் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 உப்பு நீக்கும் ஆலைகள் உள்ளன. அவை நகரத்திற்கு 180 எம்.எல்.டி வரை தண்ணீர் வழங்கி வருகின்றன. சனிக்கிழமை நிலவரப்படி, நகரத்திற்கு நீர் வழங்கும் நான்கு பெரிய ஏரிகளில் நீர் சேமிப்பு 6.152 டி.எம்.சி கன அடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் நீர் இருப்பு 0.920 டி.எம்.சி கன அடியாக இருந்தது. பூண்டி ஏரியில் 1.467 டி.எம்.சி கன அடி தண்ணீர் உள்ளது. அதேபோல், 0.072 டி.எம்.சி கன அடி தண்ணீர் சோழவரம் ஏரியில் உள்ளது. ரெட்ஹில்ஸ் ஏரியில் 2.613 டி.எம்.சி கன அடியாகவும், செம்பரம்பாக்கத்தில் 2 டி.எம்.சி கன அடியாகவும் தண்ணீர் உள்ளது. மார்ச் 11, புதன்கிழமை நிலவரப்படி, வீராணம் ஏரியில் 1.325 டி.எம்.சி கன அடி தண்ணீர் உள்ளது.

இந்நிலையில், நெம்மெலி உப்புநீக்கும் ஆலை மூடப்படும் என்பதால் சென்னையின் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு (மார்ச் 17 முதல், ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை) நீர் விநியோகம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தண்ணீரில் இருந்து சிறு சிறு துகள்களை வடிகட்ட TBS பயன்படுத்தப்படுகிறது. இந்த TBS-ஐ (டிராவலிங் பேண்ட் ஸ்கிரீன்) சரிசெய்வதற்காக ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட உப்புநீக்கும் ஆலை மார்ச் 17 காலை 6 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 6 மணி வரை மூடப்படும்.

இதனால், தென் சென்னை பகுதிகளான திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், மைலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், இஞ்சம்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் 15 நாட்கள் பாதிக்கப்படும். நீர் விநியோகம் நிறுத்தப்பட்ட காலகட்டத்தில் மேற்கண்ட அனைத்து பகுதிகளுக்கும் நீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்தவும், போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமிக்கவும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக டேங்கர்களில் தண்ணீர் வழங்குவதற்காக பொதுமக்கள் பின்வரும் பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்:

மைலாப்பூர் மற்றும் மந்தைவெளி : 8144930909

அடையார், வேளச்சேரி, பெசண்ட் நகர், திருவான்மியூர் : 8144930913

கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி : 8144930914

இஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் : 8144930915

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com