சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தாமதமாகத் தண்ணீர் நிரப்பப்படுவதால், நோயாளிகள் தண்ணீரின்றி அவதிப்படுவது, புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சிறப்பு வார்டுகளை கொண்ட ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பிரதான கட்டடங்களைக் கொண்டு செயல்படும் மருத்துவமனையில் சில நாட்களாகத் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அவசர தேவைகளுக்குக் கூட தண்ணீர் தேடி அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகளை புதிய தலைமுறை படம் பிடித்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனை டீன் நாராயணசாமி அறிவுறுத்தலின் பேரில், கூடுதல் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.