முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக மட்டும் விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், அதனை ஒட்டிய குமுளி மற்றும் தேக்கடியில் கடந்த இரண்டு மாதங்களாக முற்றிலும் மழை ஓய்ந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 114.10 அடியாக உள்ளது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக மட்டும் விநாடிக்கு 100 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு வெறும் 63 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 1,576 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தமிழக பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது தவிர்க்க முடியாதது என்றாலும், இது தமிழக விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.