கல்லணையிலிருந்து பாசனத்திற்காக நீர்த் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து, டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி கடந்த 13-ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, கல்லணையிலிருந்து பாசனத்திற்காக நீர்த் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு 6 அமைச்சர்கள் மலர்த் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர். இதனால் டெல்டா விவசாயிகள் பயன்பெறுவர்.