எதிர்வரும் மழை காலத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை கொடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அது குறித்த தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் பெருநகர சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ்.
‘கடந்த ஒரு மாத காலமாக வேளச்சேரி ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை கொடிகள் அகற்றப்பட்டு வரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த பதினைந்து நாட்களுக்குள் முழுவதுமாக ஏரியில் படர்ந்துள்ள கொடிகள் அகற்றப்படும் என நம்புகிறேன். மழை காலத்தை மனதில் கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது’ என அவர் தெரிவித்துள்ளார்.
துணை ஆணையரின் பணியை பாராட்டி தமிழக முதல்வரும் ட்வீட் போட்டுள்ளார்.