மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 16,614 கன அடியிலிருந்து 20,970 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ,கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 7,538 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 20,970 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 63 அடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.