குற்றாலத்தில் நேற்று பெய்த மழைகாரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் கடந்த பல நாட்களாக வெப்பத்தினால் தண்ணீர் இன்றி அருவிகள் வறண்டு காணப்பட்டன. ஆனால் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் மழை பெய்ததால் மெயின் அருவி , ஐந்தருவி ஆகியவற்றில் லேசான தண்ணீர் வரத்து காணப்பட்டது தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் தண்ணீர் அளவு குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, குற்றாலம், தென்காசி பகுதிகளில் கன மழை பெய்தது இதனால் நேற்று இரவே அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 5 மணிக்கு மேல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.