தமிழகத்தில் ஆயிரத்து 612 குடிநீர் ஆலைகள் அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீர் ஆலைகள் அடங்கும். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.