பொங்கல் பரிசு வாங்க போறீங்களா: இதையும் கவனத்தில் வச்சிக்கோங்க!

பொங்கல் பரிசு வாங்க போறீங்களா: இதையும் கவனத்தில் வச்சிக்கோங்க!
பொங்கல் பரிசு வாங்க போறீங்களா: இதையும் கவனத்தில் வச்சிக்கோங்க!
Published on

பொங்கல் பரிசு வழங்கல் தொடர்பாக நியாய விலை கடைகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.  

பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த பரிசுத்தொகைக்கான டோக்கனானது வரும் 26 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட இருக்கின்றன. இந்தப் பரிசுத் தொகையினை ஜனவரி 13 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட நிலையில், உணவுப் பொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் பொங்கல் பரிசு வழங்கல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது.

அவையாவன: -

1. பொங்கல் பரிசுத்தொகுப்பை ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதிக்குள் முடித்தல் வேண்டும். அதில் விடுபட்ட அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கல் வேண்டும்.

2. 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீடு வீடாக டோக்கன் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொங்கல் பரிசினை வழங்க வேண்டும்.

3. பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2500 ரொக்கப்பணத்தையும் அட்டைத்தாரர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். ரொக்கத்தொகையை 2000 மற்றும் 500 தாள்களாகவும், அதற்கு வாய்ப்பு இல்லாத நேரத்தில் ஐந்து 500 தாள்களையும் வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும், பணத்தை கவரில் வைத்து கொடுக்கக்கூடாது. இந்த பரிவர்த்தனையானது விற்பனை இயந்திரத்தின் மூலம் நடைபெறல் வேண்டும்.

4. பொங்கல் பரிசு தொகை வழங்கல் தொடர்பான பரிவர்த்தனையானது, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வழியாக சென்றடைதல் வேண்டும். 

5. நியாய விலைக்கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பொருட்களை வாங்க வேண்டும். அதே போல முகக்கவசம் அணிந்து வருதல் கட்டாயமாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com