மின்சாரத்தால் பறிபோன வலது கை.. மின்னல் வேகத்தில் பாயும் இடது கை.. அரசின் உதவிக்காக ஏங்கும் இளைஞர்!

ஜிப்ரான் கடந்த 2017-ல் வீட்டின் மாடியில் விளையாடி கொண்டிருந்த போது, மின்கம்பியில் சிக்கிய ஸ்கிப்பிங் கயிறை எடுக்க முயன்றுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதால் தனது வலது கையை இழந்தார்.
மாணவர் ஜிப்ரான்
மாணவர் ஜிப்ரான்புதியதலைமுறை
Published on

சாதிக்க முயற்சியும், தன்னம்பிக்கையுமே போதும் என்பதை எடுத்தியம்பும் வகையில் தனது ஒற்றைக் கையால் தட்டச்சு செய்து சாதித்து வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்.வாலாஜா நகரைச் சேர்ந்த பசுலூர் ரகுமான்- பர்ஜானா தம்பதியின் மகன் ஜிப்ரான். இவர் கடந்த 2017-ல் வீட்டின் மாடியில் விளையாடி கொண்டிருந்த போது, மின்கம்பியில் சிக்கிய ஸ்கிப்பிங் கயிறை எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, மின்சாரம் தாக்கியதால் ஜிப்ரான் தனது வலது கையை இழந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு செயற்கைக் கை பொறுத்தப்பட்டது. இவரது எதிர்காலம் குறித்து கவலையுற்ற பெற்றோர், 10ஆம் வகுப்பு முடித்ததும் தட்டச்சு பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர்.

2023-ல் தட்டச்சு பயிற்சியில் சேர்ந்த அவர் ஜூனியர் கிரேடு ஆங்கிலம் முடித்துள்ளார். இந்நிலையில், விண்ணப்பம் அளித்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை என பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, செயற்கை கையை மாற்ற அரசு உதவ வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்த மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணன், மாணவரின் பாதிப்பு விகிதம் மற்றும் விண்ணப்பம் ஆகியவற்றை பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்கவும், செயற்கை கை பொறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com