நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.
மொத்தமாக 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஆண் வாக்காளர்களில் 3 கோடியே 6 லட்சம் பேரும், பெண் வாக்காளர்களில் 3 கோடியே 17 லட்சம் பேரும், மாற்றுப் பாலினத்தவர்களில் 8,467 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முதல் நபராக வாக்களிப்பதற்காகவே, தென் சென்னைக்கு உட்பட்ட திருவான்மையூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார் நடிகர் அஜித் குமார்
சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை செலுத்தியுள்ளார். வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வரிசையில் வந்து நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.
“புதிய தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்”
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 19, 2024
- வாக்களித்த பின் இபிஎஸ் கோரிக்கை!#EdappadiPalanisami | #ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT pic.twitter.com/dOQbZt1pSZ
மக்களவை தேர்தல் 2024 வாக்களிப்பு குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு. அதில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.…
— Narendra Modi (@narendramodi) April 19, 2024
சாதனை அளவை எட்டும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார் பிரதமர்.
தருமபுரி பாமக மக்களவை தொகுதி வேட்பாளர் சௌமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்குகினை பதிவு செய்துள்ளார். அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் கே.பாலு வாக்கு செலுத்தினார்.
காரைக்குடி அருகே கண்டனூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். மற்றொருபுரம், திருச்சியில் தில்லைநகர் மக்கள்மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் திமுக-வின் இந்நாள் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்.
சென்னை சாலிகிராமம் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்துள்ளார். அதே இடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன் மகனும் விருதுநகர் தொகுதி வேட்பாளருமான விஜய பிரபாகரனுடன் வந்தார். உடன் பிரேமலதாவின் மற்றொரு மகன் சண்முக பாண்டியனும் இருந்தார்.
இந்நிலையில் அங்கு சந்தித்துக்கொண்ட தமிழிசை மற்றும் பிரேமலதா, ஒருவரையொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்து கை கொடுத்து ஆரத்தழுவினர். இக்காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வாக்குச்சாவடியில் ஆரத்தழுவிய தமிழிசை - பிரேமலதா#PremalathaVijayakanth | #TamilisaiSoundararajan | #LokSabhaElections2024 | #Election2024 | #ElectionWithPT pic.twitter.com/AcGTiBqNdL
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 19, 2024
திண்டுக்கல் மக்களவை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் வாக்கு செலுத்தினார். தேனி கம்பன் அருகே நாராயணதேவன்பட்டியலில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தனது வாக்கினை செலுத்தினார். தூத்துக்குடியில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வாக்கு செலுத்தினார்.
ஒட்டன் சத்திரம் தள்ளிமந்தயத்தில் சிஎஸ்ஐ பள்ளியில் அமைச்சர் சக்கரபாணி வாக்கு செலுத்தினார். கடலூர் முட்டம் கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் வாக்களித்தார்.
திருச்சி கிராப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த போது, “மனிதன் பொறுப்பாக வரவும், பொறுப்புக்கு வரவும் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாக்களித்துள்ளார்.
போலவே சென்னை திருவான்மியூரில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், தன் கணவர் சரத்குமாருடன் இணைந்து வாக்களித்துள்ளார். மற்றொருபுரம் நாகர்கோவில் எஸ்.எல்.பி பெண்கள் பள்ளியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வாக்கு செலுத்தினார்.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளாதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, தற்போது வரை புதுக்கோட்டை வேங்கைவயலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க யாரும் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
தி.நகர் வாக்குச்சாவடியில் இசையமைப்பாளர் இளையராஜா வாக்களித்தார். முன்னதாக இந்த வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு வாக்கு செலுத்தியிருந்தார்.
சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு செலுத்தினார். சென்னை, டிடிகே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் காலை 8 மணியளவில் வாக்கு செலுத்தினார் நடிகர் தனுஷ்
மத்திய அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேட்டில் வாக்கு செலுத்தினார். சென்னை வளசரவாக்கத்தில் ஐ.கே.கே நிறுவனர் பாரிவேந்தர் வாக்கு செலுத்தினார். கரூர் தொகுதி தொட்டம்பட்டியில் வாக்களித்தார் பாஜக வேட்பாளர் அண்ணாமலை.
வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “நல்லவர்கள் நம்மை ஆள வேண்டும். நல்ல ஆட்சியை கொண்டுவர மக்கள் உதவ வேண்டும். மாற்றம் ஏற்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார்.
சென்னை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசெலுத்தினார்.
பின் பேசிய முதல்வர், “வாக்குரிமை உள்ள அனைவரும், மறக்காமல் - புறக்கணிக்காமல் வாக்களிக்க வேண்டும். நான் என் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். நீங்கள் நினைப்பதுபோல இந்தியாவுக்கு வெற்றிதான்” என கேட்டுக்கொண்டார்.
சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில், ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்ட நிலையில், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு பிரச்னை சீர்செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வாக்கு செலுத்தினார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் காளியம்மாள் வாக்கு செலுத்தினார்.
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வாக்களித்தார். திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜான் வெஸ்ரி பள்ளியில் மக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் MP திருச்சி சிவா.
திருச்செந்தூர் தண்டபத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு செலுத்தினார்.
மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் ஹார்லிபட்டியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.
நெல்லை காவல்கிணறு அருகே பெரிய நாயகிபுரத்தில் சபாநாயகர் அப்பாவு வாக்கு செலுத்தினார்.
எடப்பாடி அருகே பெரியசோகை வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. 40 மற்றும் 44 ஆம் எண் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் வாக்கு செலுத்த வந்த மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை திருவிக நகரில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் சேகர் பாபு வாக்கு செலுத்தினார். கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வாக்கு செலுத்தினார்.
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தனர். மயிலாப்பூரில் திமுக-வின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வாக்கு செலுத்தினார்.
நெற்குன்றத்தில் தமிழக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வாக்கு செலுத்தினார். இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% வாக்குகளும், மத்திய சென்னையில் 8.59% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
திருவள்ளூரில் 12.31% வாக்குகள், வடசென்னையில் 9.73% வாக்குகள், ஸ்ரீபெரும்புதூரில் 11.18% வாக்குகள் பதிவாகியுள்ளன” என்றார். 39 தொகுதிகளின் நிலவரத்தை கீழ் இணைக்கப்படும் புகைபப்டத்தில் அறியலாம்...
பிற மாநிலங்களின் நிலையை, கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணலாம்...
மநீம தலைவர் கமல்ஹாசன் சென்னை தேனாம்பேட்டையிலும், கவிஞர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து சூளைமேட்டிலும் ஆகியோர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். போலவே அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே அங்கனூர் கிராமத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் அமைச்சர் உதயநிதி தன் மனைவி கிருத்திகா உதயநிதியோடு வாக்கு செலுத்தினார்.
சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு நடிகரும் த.வெ.க தலைவர் விஜய் வாக்களிக்கத்துள்ளார்.
அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் காவல்துறையினர்.
வாக்களித்த பின், "நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) April 19, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம் pic.twitter.com/SboEtwyt83
முன்னதாக கிண்டி வேளச்சேரியில் தன் வாக்கை செலுத்தியிருந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. முதன்முறை வாக்காளர்கள் வாக்கு செலுத்த முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 26.66% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிகபட்டமாக திருச்சி மற்றும் திருப்பூரில் 22% வாக்குகளும், கள்ளகுறிச்சியில் 15% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முதியவர்கள் வாக்கு செலுத்த சென்றபோது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருத்தணியில் வாக்கு செலுத்த காத்திருந்தபோது ஒருவர் இறந்துள்ளார்.
திருத்தணியை அடுத்த நெமிலியை சேர்ந்த கனகராஜ், சேலம் சூரமங்கலத்தில் 65 வயதான பழனிசாமி, செங்கவல்லி அருகே 77 வயது மூதாட்டி சின்ன பொண்ணு என மூவர் வாக்களிக்க சென்றபோது இறந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பிற்பகல் 1 மணி வரை வந்த விவரத்தின்படி வாக்குப்பதிவானது தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்டமாக தருமபுரியில் 44.08% வாக்குகள் பதிவாகி உள்ளன. மத்திய சென்னையில் 32.31 % வாக்குகள் பதிவாகி உள்ளன. விளவங்கோடு தொகுதியில் 35.14% பதிவாகியுள்ளன” - சத்யபிரதா சாகு
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களின் தந்தை சிவக்குமார் வாக்களித்தனர்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் அரவிந்த்சாமி. ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் இசையமைப்பாளர் அனிருத். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம், தன் வாக்கை செலுத்தியுள்ளார். அனைவரும் வாக்களிக்க வேண்டுகோளும் வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
சென்னை ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா.
சென்னை ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா#ElectionWithPT | #LokSabhaElection2024 | #Election2024 | #ElectionUpdateWithPT | #Trisha pic.twitter.com/4kqhaqizuH
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 19, 2024
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நாமக்கல் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று இயந்திரம் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை வைத்துவருகின்றனர்.
இரவு 7 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் நள்ளிரவு 12 மணியளவில், தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுவிட்டதாக அரசியல் தலைவர்கள் தெரிவித்த நிலையில், வாக்கு விகிதம் தொடர்பான புள்ளிவிவரத்திலும் சர்ச்சை எழுந்துள்ளது.