“நான் வருவேன்..’’ - சிறையிலிருந்து விடுதலையானது முதல் சமீபத்திய சூளுரை வரை: சசிகலா கடந்து வந்த பாதை!

சிறையிலிருந்து வெளிவந்த நாள்முதல் - சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு வரை, சசிகலா கடந்த வந்த பாதை குறித்துப் பார்ப்போம்.
jayalalitha, sasikala
jayalalitha, sasikalapt desk
Published on

சசிகலாவின் எண்ட்ரி?

“பொதுமக்களுக்கு அதிமுக என்றால் பிரியம் அதிகம். நல்ல நேரம் இப்போது வந்துவிட்டது. காலம் கணிந்துள்ளது. இதையே எப்போதும் சொல்கிறேன் என எண்ண வேண்டாம். இதுதான் சரியான நேரம். நிச்சயமாக தமிழக மக்கள் நம் பக்கம்தான். அதிமுக முடிந்துவிட்டது என நினைக்க முடியாது. என்னுடைய என்ட்ரி இப்போது ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எனக்காக இருக்கிறார்கள். 2026இல் அம்மாவுடைய ஆட்சியை நிச்சயமாக அமைப்போம். தனிப்பெருங்கட்சியாக இருப்போம்” என பத்திரிகையாளர் சந்திப்பில் தடாலடியான கருத்துக்களை உதிர்த்திருக்கிறார் சசிகலா.

அவர் இப்படிப் பேசுவது முதன்முறையல்ல. கடந்த காலங்களில் பலமுறை இப்படிப் பேசியிருக்கிறார். சிறையிலிருந்து அவர் வெளிவந்த நாள்முதல் - சமீபத்திய அவரின் பத்திரிகையாளர் சந்திப்பு வரை, அவர் கடந்த வந்த பாதை குறித்துப் பார்ப்போம்.

ஜெயலலிதாவின் மரணம், சசிகலாவின் சிறைவாசம், டிடிவி தினகரனின் தனிக்கட்சிப் பயணம் என கடந்த 2018 காலகட்டத்திலேயே அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

“சசிகலா சிறையிலிருப்பதால்தான் எடப்பாடி பழனிசாமி அவர் இஷ்டத்துக்கு செயல்படுகிறார். கட்சியையும் யார், யாரோ அவர்கள் இஷ்டத்துக்கு வழிநடத்துகிறார்கள்... சின்னம்மா சிறையிலிருந்து வெளிவந்ததும் பாருங்கள். என்ன நடக்கிறது” என அவர் சிறையிலிருக்கும்போதே, அவரின் ஆதரவாளர்கள் படபடத்தனர்.

jayalalitha, sasikala
வடமாநிலங்கள் போல மாறுகின்றனவா தமிழ்நாட்டு ரயில் பயணங்கள்? மக்கள் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?

”அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்” - சசிகலா

2021 பிப்ரவரி 9-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையான நாளன்று அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவைப் பார்த்தால் கண்டிப்பாக, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக அதிமுகவில் ஏதோவொன்று நடக்கப்போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கும். நேரடியாக அதிமுக அலுவலகத்துக்குச் செல்வார், கட்சியைக் கைப்பற்றுவார் என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை.

தொடர்ந்து, பிப்ரவரி 24-ம் தேதி “அம்மாவின் பிறந்தநாளன்று சின்னம்மாவிடம் இருந்து அறிவிப்பு வரும்” என ஆருடம் சொன்னார்கள் அவரின் ஆதரவாளர்கள். ஆனால், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபட வேண்டும்” எனப் பேசினார். அந்த அதிர்ச்சியிலிருந்தே அவரின் ஆதரவாளர்கள் மீளாதிருந்த சூழலில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அரசியலிலிருந்தே ஒதுங்கிக் கொள்ளப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிருப்திக்கு ஆளாக்கினார்.

குறிப்பாக சசிகலாவை முன்னிறுத்தி, கட்சி தொடங்கியிருந்த தினகரனுக்கும் அமமுக நிர்வாகிகளுக்கும் அது மிகப்பெரிய மனசோர்வைக் கொடுத்தது.. அதேவேளை, ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் தஞ்சாவூர், ராமேஸ்வரம், திருப்புல்லாணி, மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்மலை, திருச்செந்தூர் என தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கே சில அதிமுக, அமமுக நிர்வாகிகளையும் சந்தித்தார். “தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, பல அதிமுக நிர்வாகிகளே சின்னம்மாவைத் தேடி வருவார்கள்” என அவரின் ஆதரவாளர்கள் அனல் பறக்கப் பேசினார். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

jayalalitha, sasikala
’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!

வந்துவிடுவேன் - சைலண்ட் மோட் - ரிப்பீட்

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வேறு வழியில் ரீ- என்ட்ரி கொடுத்தார் சசிகலா. அவருக்கு ஆதரவான அதிமுக நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகின. அதில், ``நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்" என அவர் பேசியிருந்தார். `சின்னம்மா வந்துவிடுவார், கட்சியை மீட்பார்’ என மீண்டும் சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். அதற்குப் பிறகு மீண்டும் சைலன்ட் மோடுக்குப் போனார் சசிகலா.

தொடர்ந்து, அதற்குப் பிறகு, அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, நான்காண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 16-ம் தேதி சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்... அதையடுத்து, அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை வீட்டில், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அ.தி.மு.க கொடியையும் ஏற்றினார். பொன்விழா ஆண்டு தொடக்கத்தையொட்டி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. அதில், `கொடியேற்றியவர்: திருமதி வி.கே.சசிகலா, அ.தி.மு.க கழகப் பொதுச்செயலாளர்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

jayalalitha, sasikala
தோனியின் வெளியேற்றம் உறுதி? தலைவன் வழியில் "கேப்டன்சி + விக்கெட் கீப்பிங்” செய்யும் ருதுராஜ்! #viral

அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது - சசிகலா

தொடர்ந்து, கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னையிலிருந்து அ.தி.மு.க கொடி கட்டிய காரில் தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். பசும்பொன்னுக்குச் சென்று முத்துராமலிங்கத் தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தஞ்சையில் தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்தார். அப்போது, நான்தான் அ.தி.மு.க பொதுச்செயலாளர். கட்சி சீக்கிரமே நம்ம கைக்கு வரப்போகுது. அந்த நாள்தான் நமக்கு நிஜமான தீபாவளி. அதைக் கொண்டாடத் தயாரா இருங்க’ என்று உற்சாகப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.

அந்த நேரத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது, லெட்டர்பேடில் பொதுச்செயலாளர் என்று போட்டுக் கொள்வது போன்ற விஷயங்களில் சிக்கல் எழுந்தது. அப்போது, `ஆன்மிகப் பயணமாகத்தான் தொடங்கினேன். ஆனால், அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டதாக இப்போது உணர்கிறேன்’’ எனக் கொந்தளித்தார் சசிகலா. அதனைத் தொடர்ந்து, அதிமுகவிலும், இரட்டைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கபப்ட, அவர் தனி அணியாகசெயல்பட்டார். தொடர்ந்து, டிசம்பர் மாதம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சசிகலா. அந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை பஞ்சாயத்தால், அதிமுக உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் உண்டானது.

அதுகுறித்துப் பேசிய சசிகலா, ``நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களைப் பார்க்கும்போது, என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. உரிமைகளை இழந்து, அராஜகத்தின் கைகளில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க எனும் மாபெரும் இயக்கம். தனிப்பட்ட ஒருசிலரின் சுயநலத்தால் நமது வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு நம் கழகத் தொண்டர்கள் தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது!’’ என்றார்..ஆனால், அந்த சுற்றுப்பயணம் அது மிகப்பெரிய அளவில் சசிகலாவுக்குக் கைகொடுக்கவில்லை. ``டீசல் விற்கும் விலையில் சசிகலா வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருப்பது வீண் முயற்சி’’ என ஜெயக்குமார் போன்ற அதிமுக தலைவர்கள் கமெண்ட் அடித்தனர்.

jayalalitha, sasikala
நீட் தேர்வு|குவியும் முறைகேடு புகார்கள்; விசாரணையில் வெளிவரும் புது தகவல்கள்.. அமைச்சர் சொன்ன பதில்!

அனைவரையும் 'ஜெயலலிதா இல்லம்' வரவேற்கிறது

தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டுகாலம், அறிக்கைகள் வெளியிடுவது, சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவிப்பது என செயல்பட்ட சசிகலா, மீண்டும் கடந்தாண்டு ஜூலை மாதம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அதற்கிடையே, டிடிவி தினகரனும் ஓ.பி.எஸ்சும் இணைந்து பயணிக்கத் தொடங்கினர்.

சசிகலாவும் அவர்களோடு இணைவார் என்று அவர் அவரது ஆதரவாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து, இந்தாண்டு தொடக்கத்தில், ஏழாண்டுகளுக்குப் பிறகு கொடநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார் சசிகலா. கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காகவும் வந்துள்ளேன். விரைவில் அவரின் உருவச்சிலை அமைக்கப்பட்டு, திறக்கப்படும். பிளவுபட்ட அ.தி.மு.க ஒன்றுபட தொடர்ந்து முயன்று வருகிறேன்.

அந்த நடவடிக்கை விரைவில் வெற்றியடையும். அ.தி.மு.க‌ ஒன்றுபட ஒருவருக்கொருவர் விட்டுத் தர வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியமானது" என்று பேசினார். தொடர்ந்து, போயஸ்கார்டனில், வேதா இல்லத்துக்கு எதிராக வீடு கட்டிக் குடியேறினார். ``சின்னம்மா போயஸ்கார்டனுக்கு வந்துவிட்டார். இனிதான் ஆட்டம் ஆரம்பம்’’ மீண்டும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகமாகினர்.

தொடர்ந்து, தேர்தலுக்கு முன்பாகவும், `நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை தீர்மானிப்பது, மக்கள்தான். இந்த தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க குறித்து எல்லோருக்கும் புரியும். அ.தி.மு.க ஒன்றாக இணைவதற்கான நேரம் வந்துவிட்டது. நான், என் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரே அணியாக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்கும். நான் அமைதியாக இருப்பதற்கான விடை விரைவில் கிடைக்கும்" என்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, , “கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் 'ஜெயலலிதா இல்லம்' அன்புடன் வரவேற்கிறது” என அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்..

jayalalitha, sasikala
1964 முதல் 2024 வரை - இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகள் - ஓர் பார்வை

குறிப்பாக, “நான் அதிகமாக பேச மட்டேன். முக்கியமான நேரத்தில் மட்டுமே குரல் கொடுப்பேன். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். திமுகவின் சலசலப்புகள் எப்படி ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை கொடுக்க வேண்டும். திமுகவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காக்க வேண்டும்’’ எனப் பேசியிருக்கிறார். சசிகலாவின் இந்த சூளுறை நடைமுறைக்கு வருமா, இல்லை வழக்கம்போல புஸ்வானமாகிப் போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com