விவேக் ஜெயராமன் சட்டப்படிப்பு சேர்ந்ததில் முறைகேடு?

விவேக் ஜெயராமன் சட்டப்படிப்பு சேர்ந்ததில் முறைகேடு?
விவேக் ஜெயராமன் சட்டப்படிப்பு சேர்ந்ததில் முறைகேடு?
Published on

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர்ந்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பலைக்கழக துணைவேந்தராக வணங்காமுடி இருந்த காலத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் விவேக் ஜெயராமன் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுற்கு தேவையான எந்தச் சான்றிதழும் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மூன்றாண்டு எல்எல்பி ஹானர்ஸ் படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருடைய விண்ணப்பதுடன் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்பதற்கு அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழ்பவர் என்பதற்கான வங்கி கணக்கு புத்தகம், விண்ணப்பதாரருக்கும் -வெளிநாட்டு வாழ் இந்தியருக்குமான உறவை உறுதிபடுத்தும் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் போன்றவை வழங்கப்படவில்லை என முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடிக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதல் தகவல் அறிக்கையில் விவேக் ஜெயராமன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com