விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பழுதாகி நின்ற பேருந்தை பழுது நீக்கி கொடுத்து உதவிய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னையில் இருந்து சாத்தூர் திரும்பிய தனியார் பயணிகள் மினி பேருந்து திடீரென பஞ்சராகி சாத்தூர் சுங்கச்சாவடியில் அருகே சாலையில் நின்றுள்ளது. பேருந்தில் பஞ்சரான டயரை கழற்றுவதற்கான கருவிகள் இல்லாததால் டயரை கழற்ற முடியாமல் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது இரவு நேர ரோந்து பணியில் இருந்த சாத்தூர் காவல் நிலைய காவலர்கள், சற்றும் யோசிக்காமல் தங்களது வாகனத்தில் இருந்த கருவியை கொண்டு அவர்களே பஞ்சரான டயரை கழற்றி மாற்று டயரை மாட்டி உதவியுள்ளனர்.
இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் வாகனம் பழுதாகிவிட்டது. என்ன செய்வது என திகைத்து இருந்த பேருந்து ஓட்டுநருக்கு தேவையான நேரத்தில் களத்தில் நின்று காவல் துறையினர் உதவிய நிகழ்வு பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.