விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதோஷம் மற்றும் வைகாசி பெளணர்மியை முன்னிட்டு நாளை முதல் வரும் 16-ஆம் தேதி வரை பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலை ஏறி கோயிலுக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் திடீர் காட்டாறு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையால் மலையேற தடை விதிக்கப்படும்.
வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலையேறி நேராக கோயிலுக்கு சென்று வழிபட்டு திரும்ப மட்டுமே பக்தர்களால் முடியும்.