விருதுநகரில் இறைச்சி கடையில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலையில் இறைச்சி பார்சல் செய்து கொடுப்பது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. இதற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்த புதிய வழிமுறைகளை இப்போதிலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விருதுநகரில் பழனி என்பவர் நடத்தி வரும் இறைச்சி கடையில், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகளில் இறைச்சியை பார்சல் செய்து தரப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இயற்கையான முறையில் கிடைக்கும் வாழை இலையின் மகத்துவத்தையும் இந்தக் கடை உரிமையாளர் உணர்த்தி வருகிறார்.