விஜய கரிசல்குளத்தில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் விஜய கரிசகுளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 ஜாஸ்பர்,  சர்ட் கற்கள்
ஜாஸ்பர், சர்ட் கற்கள்புதியதலைமுறை
Published on

செய்தியாளார் : மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் விஜய கரிசகுளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜாஸ்பர்,  சர்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2400 க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக அகழ்வாய்வு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2400 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் பழமையான ஜாஸ்பர், சர்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கற்கள் பழங்காலத்தில் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க மூலப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

 இதுகுறித்து அகழ்வாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், அகழ்வாய்வு நடைபெறுகின்ற இடத்தில் முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதேபோல உணவுக்காக பறவைகள், விலங்குகளை வேட்டையாட கருவிகளை தயாரித்துள்ளனர். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள ஜாஸ்பர், சர்ட் ஆகிய கற்கள்  வேட்டையாடப் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது இக்கற்கள் புழக்கத்தில் இல்லை என தெரிவித்தார். 

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில்,

''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com