விருதுநகரில் முதல்வர் களஆய்வு|பட்டாசு தொழிலாளர்களுடன் உரையாடல்; மாணவர்களுடன் நெகிழ்ச்சியான சந்திப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அரசு காப்பகத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் கள ஆய்வு
முதலமைச்சர் கள ஆய்வுpt desk
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை அறிய மாவட்டம் வாரியான கள ஆய்வை கடந்த 5ம் தேதி கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். களஆய்வின் இரண்டாம் கட்டமாக விருதுநகர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் கள ஆய்வு
முதலமைச்சர் கள ஆய்வுpt desk

சத்திரரெட்டியபட்டி விலக்கில் வாகனத்தை விட்டு இறங்கிய முதலமைச்சர், சாலையில் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கன்னிசேரி புதூர் பகுதியில் செயல்படும் பட்டாசு ஆலைக்குச் சென்ற முதலமைச்சர், அங்கு ஆய்வு நடத்தியதோடு, பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சர் கள ஆய்வு
விஜய் - EPS கூட்டணி இருவருக்குமே ஆபத்து…காரணங்களை அடுக்கும் பத்திரிகையாளர் SP லட்சுமணன்

பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை சரியாக கிடைக்கிறதா என்பது குறித்தும் அரசு பட்டாசு தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் பயமின்றி வேலை செய்யுமாறும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கள ஆய்வு
முதலமைச்சர் கள ஆய்வுpt desk

மாலை 5.30 மணிக்கு ராம்கோ விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர், வரும் வழியில் விருதுநகர் சூலக்கரைமேட்டில் உள்ள அரசு செவித்திறன் குறை உடையோர் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பள்ளி மாணவி மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார்.

முதலமைச்சர் கள ஆய்வு
“உங்க கூட்டணி அவ்வளவு பலவீனமாவா இருக்கு?”- விசிக தலைவர் திருமாவளவனுக்கு பத்திரிகையாளர் மணி கேள்வி!

தொடர்ந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையம் தொடங்கி ராமமூர்த்தி சாலை வரை 6 கிலோமீட்டர் தூரம் ரோட் ஷோ நடத்தினார். பின்னர் தனியார் மண்டபத்தில், கட்சி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக வாக்கு சதவீதம் குறைவாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com