செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதியில் வந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் கருணாகரன் மனைவி பாக்கியலட்சுமி மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூர்த்தி, அவரது ஏழு வயது பையன் யாஸ்வின் உள்ளிட்டோர் படுகாயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் வந்தவர்கள் அனைவரும் தப்பியோடிய நிலையில், காரை கைப்பற்றிய விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் டயர் வெடித்து இருசக்கர வாகனங்களின் மீது மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.