”மரியாதையோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை”- மேலும் ஒரு விழுப்புரம் மாவட்டச் செயலாளர் விலகல் - காரணம் என்ன?

நாம் தமிழர் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உரிய மரியாதையோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை எனக் கூறி அடுத்தடுத்து அக்கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் பதவி விலகி உள்ளனர்.
சீமான்  பூபாலன்
சீமான் பூபாலன்pt desk
Published on

செய்தியாளர்: காமராஜ்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்த பூபாலன் பதவி விலகி இருக்கிறார்.

Letter
Letterpt desk

இதுகுறித்து பூபாலன் புதிய தலைமுறைக்கு பிரத்யேமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்....

”நாம் தமிழர் கட்சியில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றினேன். இதுநாள் வரை செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. சீமான் அண்ணணிடம் கேட்டால் ’தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது என்றும், நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக் கூடாது.

சீமான்  பூபாலன்
ஜம்மு - காஷ்மீர் | முன்னிலை வகிக்கும் காங். கூட்டணி.. விடாமல் துரத்தும் பாஜக - அரியணை யாருக்கு?

என் இஷ்டப்படி தான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை; செலவு செய்யவும் கூறவில்லை’ என்று கூறுகிறார்.

2026 தேர்தலுக்கு இப்போதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன என்று இருக்கிறதுஎன்று கேள்வியெழுப்பினார்.

Seeman
Seemanpt desk
சீமான்  பூபாலன்
வினேஷ் போகட் முன்னிலை .. ஹரியானாவில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை அமைக்கிறதா காங். கூட்டணி?

தோடர்ந்து பேசிய அவர், ”அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இதே நிலைம தான் உள்ளது. கட்சியில் நிர்வாகிகள் கேட்டது பணமோ பொருளோ அல்ல. எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரம். அதையே தர முடியவில்லை என்பதால் மன வருத்தத்துடன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன்” என பூபாலன் தெரிவித்தார். இதற்கு முன்னதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சுகுமார் பதவி விலகி இருந்தது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com