PT செய்தி எதிரொலி: ’மாணவர்களுக்கு மட்டும்’ தனிப்பேருந்து அமைத்துதந்த விழுப்புரம் ஆட்சியர்

PT செய்தி எதிரொலி: ’மாணவர்களுக்கு மட்டும்’ தனிப்பேருந்து அமைத்துதந்த விழுப்புரம் ஆட்சியர்
PT செய்தி எதிரொலி: ’மாணவர்களுக்கு மட்டும்’ தனிப்பேருந்து அமைத்துதந்த விழுப்புரம் ஆட்சியர்
Published on

விழுப்புரத்தில் ஆபத்தை உணராமல் கூட்ட நெரிசலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் குறித்து, நேற்றைய தினம் புதிய தலைமுறை இணையதளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. 

புதிய தலைமுறையின் இந்த செய்தி எதிரொலியாக, விழுப்புர மாவட்ட ஆட்சியர் மோகன் பள்ளி மாணவர்களுக்கு என தனியாக அரசு இலவச பேருந்துகளை இயக்க உத்தரவிட்டு, அதை உடனடியாக அமல்படுத்தவும் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை கடந்த 1-ம் தேதி தொடங்கி பள்ளிகள் இயங்கிவரும் நிலையில், விழுப்புரத்தில் பள்ளி நிறைவடைந்த பின்னர் வீடு திரும்புவதற்காக திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த பள்ளி மாணவர்கள், ஒரே பேருந்தில் கூட்டம் கூட்டமாக ஏறினர். தொடர்ந்து,  படியில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் அவர்கள் பயணம் செய்தனர். இதனை புதிய தலைமுறை இணையதளம் வழியாக அறிந்த விழுப்புர மாவட்ட ஆட்சியர், சற்றும் தாமதிக்காமல் நேற்றே நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்காரணமாக, இன்று பள்ளி மாணவர்களுக்கு என தனியாக பேருந்துகள் இயங்கியது. 

மாணவர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் இந்த பேருந்து அமைக்கப்பட்டிருந்தது. மற்ற பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு அனுமதி இல்லை என்பதை குறிக்கும் வகையில், ‘பள்ளி மாணவர்களுக்கு மட்டும்’ என முன்பலகையில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. இப்படியாக மாணவர்கள் மட்டும் பயணம் செய்வதற்காக மொத்தம் நான்கு தனிப்பேருந்துகள் அங்கு இயக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், இன்று முதல் அந்த பேருந்துகள் இயங்கின.

மகிழ்ச்சியாக இதில் பயணியத்த மாணவ மாணவியர்கள், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா மாணவர்களுக்கு பல்வேறு கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அறிவுரைகளை வழங்கினார்.

ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com