நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தாலிக்கு தங்கம் மற்றும் பணம் பெறும் பயனாளிகளிடம் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் லஞ்சம் பெறுவது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாளை நெல்லையில் நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தங்கமும், பணமும் முதலமைச்சரின் கையில் வழங்கப்பட உள்ளன.
ஆனால், அதற்கு முன்பாகவே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பயனாளிகளை வரச்சொல்லி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுமாறு அலுவலர்கள் கூறியுள்ளனர். விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதர்கள் அதிகாரியின் மேஜையில் இருக்கும் பாலித்தீன் கவரில் 500 ரூபாய் பணத்தை வைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார்கள். அதன்படி அலுவலக உதவியாளர் பயனாளிகளிடம் இருந்து பணம் பெற்று கவரில் வைக்கும் வீடியோ காட்சிகள் புதிய தலைமுறையின் கள ஆய்வில் எடுக்கப்பட்டுள்ளது.