விஜயகாந்த்: திரை முதல் அரசியல் களம் வரை

விஜயகாந்த்: திரை முதல் அரசியல் களம் வரை
விஜயகாந்த்: திரை முதல் அரசியல் களம் வரை
Published on

திரைத்துறையிலும் அரசியலிலும் முத்திரை பதித்த விஜயகாந்த்திற்கு இன்று 66வது பிறந்த நாள். 

மதுரையில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த விஜயகாந்த்துக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர் விஜயராஜ். 1979ம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படம்தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. பின்னர் ‘தூரத்து இடிமுழக்கம்’ திரைப்படம் மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்டார். இதன்பின் படிப்படியாக உயர்ந்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார் விஜயகாந்த். 1984ம் ஆண்டில் மட்டும் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து 18 படங்கள் வெளியாகின. தமிழில் இது ஒரு சாதனை எனக் கூறப்படுகிறது. ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’,‘சின்னக்கவுண்டர்’,‘வானத்தை போல’ என ஏராளமான வெற்றிப்படங்களை தந்து திரையுலகில் வானத்தை தொட்டார் விஜயகாந்த்.  

இதன் பிறகு 2005ம் ஆண்டு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தார் இவர், அந்தாண்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றிபெற்றார். எனினும் அத்தேர்தலில் 8.33% வாக்குகளை பெற்றதன் மூலம் தேமுதிக எனும் கட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வென்றது. இதன்மூலம் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார் விஜயகாந்த். எனினும் 2014 மக்களவை தேர்தலிலும் 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் தேமுதிக கட்சி சரிவைக் கண்டது.  இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் தங்கள் கட்சி தனித்து களம் காணும் என இவர் அறிவித்திருக்கிறார். அரசியல் பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ள விஜயகாந்த்துக்கு அடுத்தாண்டு வரபோகும் தேர்தல் ஒரு சவாலாகவே இருக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com