இளைஞரணி செயலாளராகும் விஜய பிரபாகரன்? ஒருபக்கம் உதயநிதி, மறுபக்கம் விஜய்.. பிரேமலதாவின் திட்டம் என்ன?

“விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்pt web
Published on

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

“விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன பதவி, எதற்காக இந்த ஏற்பாடு விரிவாகப் பார்ப்போம்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகமான, கேப்டன் ஆலயத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மொத்தமாக 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி?
விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி?

உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்திடவும், 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குவது, விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, கனிமவளக் கொள்ளை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் மொத்தமாக 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
“திமுக ஆட்சி வாடகை ஆட்சி.. அமரன் எப்படி இருந்தாலும் பாராட்டக்கூடிய விஷயம்” - பிரேமலதா விஜயகாந்த்

விஜய பிரபாகரனுக்குப் பதவி

நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் (தேமுதிக) அதிமுகவுடன்தான் கூட்டணி. நட்புணர்வுடன் அதிமுக - தேமுதிக கூட்டணி தொடர்கிறது. தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு விரைவில் முக்கியப் பதவி வழங்கப்படும். அதேபோல், கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் முக்கியப் பதவி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். தேமுதிக மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம்” உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்pt web

இந்தநிலையில், விஜயபிரபாகரனுக்குக் கட்சியில் பதவி கொடுக்க முடிவு செய்திருப்பது குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம். “கேப்டன் மறைவுக்குப் பிறகு எழுந்த அனுதாபம் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என கேப்டனின் குடும்பத்தினர் நம்பினார்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் கூட்டமும் சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பெருகிய ஆதரவும் அத்தகைய நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தது. அதனால்தான், மிகுந்த நம்பிக்கையோடு விஜய பிரபாகரனை விருதுநகரில் எம்.பி வேட்பாளராக்கினார்கள்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
மகாராஷ்ட்ர பாஜக தேர்தல் அறிக்கை: 10 லட்ச மாணவர்களுக்கு மாதம் ரூ 10,000; பெண்களுக்கு மாதம் ரூ 2,100!

ஒருபுறம் உதயநிதி.. மறுபுறம் விஜய்

விஜயகாந்தின் முகச்சாயலோடு இருப்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு அவருக்கு உருவாகியது. அவர் வெற்றியடையாவிட்டாலும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார். தொடர்ந்து, கட்சிக் கூட்டங்களில் எல்லாம் கலந்துகொண்டு பேசிவருகிறார். அதனால், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை அவருக்கு வழங்க முடிவு செய்திருக்கிறார் எங்கள் பொதுச் செயலாளர். தற்போது அந்தப் பொறுப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இருக்கிறார். அவருக்கு வேறு ஏதாவது பொறுப்பு வழங்கப்படும்.

கேப்டனின் சினிமா வாரிசாக சண்முகப் பாண்டியனையும் அரசியல் வாரிசாக விஜய பிரபாகரனையும் உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் பொதுச் செயலாளரின் திட்டம். ஆனாலும் கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்காமல்தான் அவர் இதுவரை இருந்தார். ஆனால், ஒருபுறம் உதயநிதி திமுகவின் முகமாக ஆகிவிட்டார்.

மறுபுறம் விஜய்யும் அரசியல் களத்துக்கு வந்துவிட்டார். இனிமேலும் மகனுக்குப் பொறுப்புக் கொடுக்க தாமதிக்கக் கூடாது என பிரேமலதா முடிவெடுத்து விட்டார். டிசம்பரில் கேப்டனின் முதலாமாண்டு நினைவுதினம் வருகிறது. அதற்குள் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு விடும். கட்சி தொடங்கியபோது விஜய பிரபாகரனின் மாமா சுதீஷ் வகித்த பொறுப்பை இப்போது அவரின் மருமகன் விஜய பிரபாகரன் வகிக்கப் போகிறார்” என்கிறார்கள்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
தன் எழுத்துக்களால் தமிழுலகை கட்டிப்போட்ட எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com