“பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு செய்யாமல் மாநாட்டிற்கு வர வேண்டும்”-தவெக விஜய் வேண்டுகோள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு வரும்போது பொதுமக்களுக்கோ போக்குவரத்துக்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக விஜய்
தவெக விஜய்pt web
Published on

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி. சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக 280 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே பல அறிக்கைகளை வெளியிட்டு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் மாநாடுக்கு வரும் தொண்டர்கள் காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,

வணக்கம்.

பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.

காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

தவெக விஜய்
திருப்பூர் | நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - இரு சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.

அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

TVK | VKVijay | TVKMaanadu | Vikravandi
TVK | VKVijay | TVKMaanadu | Vikravandi

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.

நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.

தோழமையுடன்,

உங்கள் விஜய்” என தெரிவித்துள்ளார்.

தவெக விஜய்
”மதுரையில் பெய்த கனமழையால் எதிர்பார்த்த சேதம் ஏற்படவில்லை” - அமைச்சர் மூர்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com