இன்று அறிமுகம் செய்யப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இருவண்ணங்களில், 2 போர் யானைகளுடன் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.
தவெக
தவெகFacebook
Published on

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இருவண்ணங்களில், 2 போர் யானைகளுடன் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கொடி வடிவமைக்கப்பட்டிருப்பதாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. மேலும், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிடுகிறார்.

காலை 9.15 மணிக்கு பனையூரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தவெகவின் கொடி அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கொடி நீலம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கலாம், அதில் வாகை மலர் இடம்பெறலாம் என பல யூகங்கள் வெளியாகின. இச்சூழலில் தவெகவின் கொடியில் இரு வண்ணங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கொடியின் மத்தியில் இரு போர் யானைகளும் இடம்பெற்றிப்பது தெரியவந்துள்ளது.

தவெக
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இயக்குநர் நெல்சனின் மனைவி விளக்கம்

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் கட்சியின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் வெற்றிக்கொடி, கட்சியின் தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கட்சியின் கொடிப் பாடலை வெளியிட்டு கட்சிக் கொடி ஏற்றப்படும்.” நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது தவெக கட்சிக் கொடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com