"அவர்களுக்கு உயிர் என்றால்... எங்களுக்கு இல்லையா? அந்த ஊசிதான்.."- விக்னேஷின் உறவினர்கள் சொல்வதென்ன?

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் உறவினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விக்னேஷின் உறவினர் சொல்வதென்ன
விக்னேஷின் உறவினர் சொல்வதென்னமுகநூல்
Published on

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட அதிமுக அமைச்சர்கள் முதலியோர் மருத்துவனைக்கு நேரில் சென்று மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், இதனைத்தொடர்ந்து மருத்துவரை கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை குறித்து விக்னேஷின் உறவினர் தேவி தெரிவிக்கையில்,

"விக்னேஷ் எங்களிடம் எதுவும் சொல்லாமல்தான் இந்த தவறை செய்திருக்கிறார். மருத்துவருக்கு கத்திக்குத்தி நடந்துவிட்டது என்று அவருக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள். அந்த மருத்துவரால்தான் இங்கே ஒரு உயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஏன் யாரும் பேச முன்வரவில்லை.

மருத்துவருக்கு ஒரு நியாயம்; மக்களுக்கு ஒரு நியாயம் ஆ?... தேர்தலில் ‘மக்களுக்காகதான் நான்’ என்று பேசுகிறீர்கள் . அந்த மக்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள். அரசு மருத்துவ மனைக்கு வருவதற்கு எதற்காக நல்ல சிகிச்சை கிடைக்கும் என்பதற்காகதான்.. நீங்கள் (மருத்துவர்) செலுத்திய ஊசி நுரையீரலை பாதித்திருக்கிறது. அதை ஏன் எங்களிடம் தெரிவிக்கவில்லை. அந்த ஊசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்தது. அதை ஏன் நிறுத்தவில்லை.

அவர்களுக்கு உயிர் என்றால்... எங்களுக்கு உயிர் இல்லையா? தாய் என்பவர் ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியமானவர்.. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுக்க வேண்டும். பிரேமாவை பொறுத்தவரை ஆக்ஸிஜன் இல்லையென்றால் உயிர் பிழைக்க முடியாது.

விக்னேஷின் உறவினர் சொல்வதென்ன
’என் தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை..’- டாக்டரை கத்தியால் குத்தியவர் அளித்த வாக்குமூலம்!

எங்களது மருத்துவ அறிக்கை முழுவதையும் காவல்துறையினர் எடுத்துவிட்டு சென்று விட்டனர். நேற்றுதான் பிரேமாவை மருத்துவமனையிலிருந்து நாங்கள் அழைத்து வந்தோம். மீண்டும் மேல் சிகிச்சைக்கு அவரை தனியார் மருத்துவ மனைக்குதான் நாங்கள் அழைத்து செல்ல வேண்டியுள்ளது.. நீங்கள் எப்படி மருத்துவரின் உயிருக்காக பேசுகிறீர்களோ..அதேப்போலதான் எங்களுக்கு இந்த உயிரும்..அதை ஏன் நீங்கள் யாரும் பொருட்படுத்தாமல் இருக்கிறீர்கள்..

அரசாங்க ஊழியர் என்றால், ஒரு நியாயம். நடுத்தர வர்கத்தை சேர்ந்த மக்கள் என்றால் ஒரு நியாயமா?..எல்லா உயிரும் சமம் என்றுதான் பார்க்கவேண்டும்.

அவர்களுக்கு எவ்வளவு இழப்போ.. அதைவிட அதிக இழப்பு எங்களுக்கு. கோபத்தில்தான் விக்னேஷ் இந்த முடிவை எடுத்திருக்கிறான்.

விக்னேஷின் உறவினர் சொல்வதென்ன
கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் | உடல்நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விக்னேஷ் ஒரு வாரம் அவரது தாயின் உடன் இருந்து கழிப்பறை செல்ல உதவுவது என அனைத்தையும் அவன் தான் செய்திருக்கிறான். எவ்வளவு அவனது மனது பாதிக்கப்பட்டிருக்கும். இரண்டு பக்கமும் விசாரித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். மருத்துவருக்கு ஒன்று என்றால், வக்கிலிருந்து அனைவருமே வருவீர்கள். எங்களுக்கு யார் வருவீர்கள்?” என்று தெரிவித்திருக்கிறார்.

கைதான விக்னேஷின் உடன்பிறந்தவர் இது குறித்து தெரிவிக்கையில்,

” விக்னேஷ் எந்த பிரச்னைக்கும் போகாத ஒருவன்,. யாரையும் பார்க்காமல் தலையை குனிந்து செல்ல கூடியவன்.. இதை அவன் செய்தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவனுக்கு இருதயத்தில் பிரச்னை உள்ளது.அவரை அடித்தாலோ எதாவது செய்தாலோ அவருக்கு வலிப்பு வரும்.. அம்மா அவனை குழந்தை போல பார்த்து வந்தார்.. அம்மாக்கு அவன், அவனுக்கு அம்மா என்றுதான் இருப்பார்கள்.

பாலாஜி மருத்துவரை சந்திக்கும்போது எல்லாம் விக்னேஷ்தான் அம்மாவுடன் சென்றார். விக்னேஷ் செய்தது தவறுதான்,,நான் இல்லை என்று கூறவில்லை. டாக்டருக்கு இப்படி ஆனவுடன் முதலமைச்சர் முதல் துணை முதலமைச்சர் வரை எல்லாரும் சென்று பார்த்திருக்கிறார்கள்.. ஆனால், என் அம்மாவை தற்போது வரை பார்க்க யாரும் வரவில்லை.

விக்னேஷின் உறவினர் சொல்வதென்ன
19 மாவட்டங்களில் மழைக்கான அலர்ட்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

ஊடகம்தான் கேட்கிறதே தவிர... யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. எங்களிடம் இருந்த எல்லா மருத்துவ அறிக்கைகளையும் எடுத்து சென்று விட்டார்கள்..எனது தந்தை இறந்து 7 மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளைக்கு தேவையானதை நாங்கள்தான் சம்பாதித்து சாப்பிடவேண்டுமே தவிர.. நாங்கள் எதையும் சேர்த்தும் வைக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com