”எல்லா உயிரும் சமம் தானே; இரண்டு பக்கமும் பாருங்க”! - கதறி அழுத விக்னேஷின் தாய்!

கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞர் மீது 5 பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் என் மகன் இப்படி செய்வான் என நினைக்கவில்லை என அவருடைய தாயார் கண்ணீரோடு கூறியுள்ளார்.
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்PT
Published on

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் உறவினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட அதிமுக அமைச்சர்கள் முதலியோர் மருத்துவனைக்கு நேரில் சென்று மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில், மருத்துவரை கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்
”யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி” - மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்

தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை..

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், தன்னுடைய தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் மருத்துவரை கத்தியால் குத்தியதாக தெரிவித்தார். மேலும் அம்மாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன் என மிரட்டியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்
”கருணாநிதி பெயரை வைத்தால் மட்டும் போதுமா?”- மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து ஜெயக்குமார் காட்டம்!

என் மகன் இப்படி பண்ணுவானு நினைக்கல..

நடந்த விபரீத சம்பவம் குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய விக்னேஷின் உறவினர்கள், விக்னேஷ் ஏன் இப்படி பண்ணானு எங்களுக்கு தெரியல, அவங்க அம்மா கூடவே மருத்துவமனையில் இருந்தது அவன் தான், உடனிருந்து பாத்ரூம் கழிவை எல்லாம் அள்ளிக்கொட்டியது அவன் தான், அவன் மனதில் என்ன இருந்தது, அவனை என்ன பாதித்தது என்று தெரியவில்லை. எங்களுக்கு இப்படி பண்ணபோறானு தெரியாது, தெரிஞ்சிருந்தா தடுத்திருப்போம். மருத்துவரை எல்லோரும் போய் பாக்குறாங்க, அவனோட அம்மா உடல்நிலையும் மோசமா தான் இருக்கு, அவரையும் ஒரு உயிரா நினைச்சு கவனிச்சிங்கனா நல்லாருக்கும் என கூறினர்.

உடல்நிலை சரியில்லாத விக்னேஷின் தாயார், என்னுடைய மகன் இப்படி பண்ணுவானு நினைக்கல என கண்ணீரோடு படுத்த படுக்கையுடன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com