சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் ரூ.1.37 கோடி மற்றும் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் இயக்ககம் செயல்பட்டு வருகிறது. அதில் சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார் பாண்டியன். அவர் மீது லஞ்சப்புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது நாளாக சோதனை தொடரும் நிலையில் ரூ.1.37 கோடி மற்றும் 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 1.51 லட்சம் மதிப்புள்ள வெள்ளி, ரூ.5.40 லட்சம் மதிப்புள்ள வைரம் , ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள், ஒரு கார், 3 இருசக்கர வாகனங்கள், நிரந்த வைப்பு நிதியாக ரூ.37 லட்சம் ஆகியவையும் சோதனையில் கைப்பற்றப்பட்டது. சோதனையின்போது அதிகாரி பாண்டியன் அலுவலகத்தில் இருந்து ரூ.88,500 ரொக்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.