தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 20-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சட்டம் ஒழுங்கு சரியில்லையென்று எடப்பாடி பேச்சு... தாக்குதல் நடக்கவில்லையென்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம்... ஆளுநர் பிரச்னை அரசியலாக்கப்படுகிறதா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
சட்டம் ஒழுங்கு பற்றி பேச அய்யா எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது? தூத்துக்குடி சம்பவத்தை டிவி யில் பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களது ஆட்சிக் காலத்தில் இருந்ததை மறந்துட்டார் .
ஆளுநர் பிரச்னை அரசியலாக்கபடுகிறதா என்று கேட்பதைவிட,, திமுக தனது தேர்தல் அறிக்கையல நீட் விலக்கை கூறிவிட்டு அதை ஆளுநர் மூலமாக ஆளுநரை கட்டாயப்படுத்த கலவர அரசியல் ஆக்குகிறதா திமுக என கேளுங்கள், நீட் விலக்கு கோரிக்கை நிராகரிக்கபட்டுவிட்டது ,திமுக விரும்புவதால் ஆளுநர் இவர்கள் வைத்த ஆளு இல்லை
✓மசோதாக்களை நிறுத்தி வைப்பது எப்படி ஆளுநரின் உரிமையோ அதுபோல்
கறுப்புக் கொடி காட்டுவதும் அனைவரின் உரிமை. அதில் சிலர் கறுப்புக் கொடி வீசியது தவறு தான். எப்போதும் அறம் மட்டுமே வெல்லும்✓
✓ஆளுநர் பல மசோதாக்களை அப்படியே வைத்திருப்பதை பற்றி எதுவும் பேசாத பழனிசாமி இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
✓இது தான் ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர் செய்யும் செயலா?
✓தமிழக நலனினில் அக்கறை இல்லாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர்.
# மக்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்! புரிந்து கொள்வார்கள்
எதிர்கட்சிகள் அரசியல் செய்யாமல், அவியலா செய்வார்கள்
தாக்குதல் நடந்தது என்னமோ உண்மைதா ஆனா ஆளுநர் mela இல்லை அவரோட வண்டி mela அப்டி.....
சட்டம் ஒழுங்கு என்று எதை கூறுகிறார்கள்! பொல்லாத நடந்த பொள்ளாச்சியா? தூத்துக்குடியில் நடந்த நாக்பூரின் துயரமா?