மதச் சடங்குகள் விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

மதச் சடங்குகள் விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike
மதச் சடங்குகள் விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 4-ஆம் தேதிக்கான தலைப்பாக "ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி அல்ல திமுக: ஸ்டாலின்; புதிய நிலைப்பாடா? தொடர்ச்சியான பாதையா?" எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

திமுக அரசின் செயல்பாடுகள் ஆன்மிகத்திற்கு எதிராக உள்ளது. ஒரு முடிவை எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட தரப்பின் கருத்தை சிறிதும் கேட்காமல் உத்தரவை பிறப்பித்து விட்டு எடுத்த முடிவிற்கு ஏற்ப தலையாட்ட சொன்னால் அது சரியாக இருக்குமா.
மத சடங்குகள் விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது.

பேரறிஞா் அண்ணா அவா்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றாா். அந்த அடிப்படையில் ஓா் பொதுவான அரசு அனைத்து மதங்களுக்கும் சமமான ஆட்சியாக இருக்க வேண்டும். அனைத்து சமய விழாக்களுக்கும் முதல்வா் வாழ்த்து கூறுவது அவசியமான ஒன்று. தற்பொழுதைய தமிழ்நாடு முதல்வா் இது அனைவருக்குமான ஆட்சி என அடிக்கடி கூறி வருகிறாா். அப்படியெனில் அனைத்து விழாக்களுக்கும் வாழ்த்து கூறிடுவதே ஒா் நல்ல ஆட்சிக்கு அழகு. அதிமுக அனைத்து மத விழாவுக்கும் வாழ்த்து கூறுகிறது. எனவே அதிமுகதான் உண்மையான திராவிட கட்சியாகும் எனவே முதல்வாின் இன்றைய பேச்சில் தெளிவு இல்லை. பழைய பாணியின் தொடா்ச்சி தான் இது .

கடமை..கண்ணியம்...கட்டுப்பாடு கொடுத்த அண்ணா கொடுத்தது ஒன்றே குலம்..ஒருவனே தேவன்...ஆனால் அதில் கிருத்துவமும்...இஸ்லாமும் சேராது என்பது இன்றைய நிலை.‌.

புதிய உலகிற்கு புதிய நீதிப்பாதையின் கட்டமைப்பு மிகவும் அவசியம்! வளர்ந்த, அறிவார்ந்த,உயர்ந்த,சமநிலை, சமத்துவ தேசியத்தில்,சமூகநீதிக் கொள்கைகளே பிரதானம்! ஜனநாயகமே உண்மையின் அரசாட்சி! பழைய, அரதப்பழசான, மூர்க்கமான, சமூகத்தில் விட்டொழிக்க வேண்டிய, பல்வேறு தடைகளையும் உடைத்தெறிய வேண்டும்!

ஆன்மீகத்துக்கு எதிராக இல்லை தமிழ் இந்து ஆன்மீகத்துக்கு எதிராக. ஏனெனில் யுகாதி பண்டிகைக்கு கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும், ஓனம் பண்டிகைக்கு மலையாளிகளுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர், தமிழ் சித்திரை வருஷ பிறப்புக்கு வாழ்த்து சொல்வதில்லை.

90 சதவீதம் இந்துக்கள் என்று சொன்னவர்தானே
இது அவர்களின் தொடர்ச்சியான பாதையே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com