‘அனிதா போன்ற மாணவச் செல்வங்களை ஆளுநர் யோசிக்கவில்லை’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

‘அனிதா போன்ற மாணவச் செல்வங்களை ஆளுநர் யோசிக்கவில்லை’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
‘அனிதா போன்ற மாணவச் செல்வங்களை ஆளுநர் யோசிக்கவில்லை’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 8-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘நீட் விலக்கு மசோதா: வரலாற்றில் முதல் முறையாக ஒரே தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு... நியாயமானதா..? அல்லது பிடிவாதமா? ' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

நியாயமானதே; ஆளுநரின் செயல் தவறு என்பதனை அவருக்கு நினைவூட்டுதற்காகவும், தமிழக மாணவ மாணவிகளின், முக்கியமாக கிராமப்புற மாணாக்கர்களின் மருத்துவர் கனவினைக் கட்டிக்காக்க அரசின் இந்த செயல் நியாயமானது மட்டுமல்லாமல் பாராட்டிற்குமுரியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்பேரில் NEET தேர்வு நடைமுறை.. சட்டமன்றத்தில் தீர்மானிக்கவேண்டியதில்லை நீதிமன்றத்தில்.. தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையிடலாமே.. ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் கூறுவதுபோல் உள்ளது... யாரையோ திருப்திபடுத்தவேண்டிய சூழலில் உள்ளதோ..
திமுகவின் மீது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மத்தியில் ஆளும் பாஜகவின் பிடிவாத தந்திரப்போக்கு. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் மருத்துவக் கனவை இழந்து உயிர் நீத்த தங்கை அனிதா போன்ற மாணவச் செல்வங்களை பற்றி ஆளுநர் யோசிக்கவில்லை.
நீ பெரியவனா?நான் பெரியவனா?என்கிற போட்டியைத்தவிர வேறோன்றும் இல்லை

Subbu Lakshmi
பாஜக ஆட்சியில் எல்லாமே வரலாற்றில் முதல் முறையாகத்தான்.

ரெணடுமில்லை;
அரசியலானது!

Vanitha Kumari
சென்ற ஆட்சியில் இதே தீர்மானம் அனுப்பும்போது இது சாத்தியமில்லை என்ற ஆ.ராசாவின் பேச்சு வலைதளங்களில் ரிப்பீட் ஆக வந்து கொண்டிருக்கிறது. அப்போ ஆ.ராசா சொல்வது கோமாளித்தனமா?அல்லது இப்பொழுது நடப்பது கோமாளித்தனமா.? இல்லை மக்கள்தான் ஏமாளி

ஒன்றிய அரசின் அதிகார பிடிவாத போக்குகான....
தமிழகத்தின் நியாயமான கோரிக்கை....
"நீட் தேர்வு ரத்து செய்"

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com