தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 29-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘காங்கிரஸ் மீண்டெழ வேண்டுமென்று விருப்பம்...பாஜக எதிர்க்கட்சிகளைத் திசைதிருப்புகிறதா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
தன் இடத்தைக் காங்கிரஸ் பிடிக்க முடியாதென்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், மீண்டு வந்தாலும் ஜெயிக்க முடியாது என்ற தைரியம். எதிர்க்கட்சிகளை திசை திருப்ப வேண்டியதில்லை. ஒன்றாக இல்லாமல் தனித்தனியே பிரதமர் நினைவில் இருக்க பயமுமில்லை. இனி
நாம் தானே வருவோமென்ற அலட்சியம் கூட இருக்கலாம்.
திசைதிருப்புவதாக தெரியவில்லை. மாநில உரிமைகள் சுயாட்சி பேசும் மாநில கட்சிகள் வலுபெறுவது நாளை இந்திய பேரரசுக்கு ஆபத்து விளைவிக்க கூடியது. மத்திய அரசு அமைப்பை பலம் குன்றிய அமைப்பாக மாற்றிவிட வாய்ப்பு உள்ளதுனு மூத்த தேசிய அரசியல்வாதியான கட்கரி காங்கிரஸ் பலம் பெற வேண்டும் என நினைக்கிறார். பாஜகவுக்கான மாற்று தேர்வாக இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸ் தான் இருக்க வேண்டும்.
பாஜக மற்றும் காங்கிரஸை தவிர வேறு எந்த கட்சியும் மத்திய அரசு அமைப்பை பேண விரும்பாது. தேசிய கட்சிகளால் மட்டுமே அனைத்து மாநிலங்களையும் மாநிலங்களை சமமாக பார்க்க இயலும். மாநில கட்சிகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமரும் போது அந்தந்த மாநில மக்களின் நலனை அதிகம் முதன்மைப்படுத்தி வந்து இருக்கின்றன. மாநில கட்சிகள் மத்தியில் ஆட்சி நடத்துவது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பிற மாநிலங்களை ஆட்சி செய்வது போல தான் . மூத்த அரசியல்வாதியான கட்கரி கருத்தை எதிர்கட்சிகள் ஒன்றிணைய தடுப்பதற்காக சொல்வதாக காங்கிரஸ் நினைக்க கூடாது. மத்திய அரசமைப்பை சுதந்திரமாக நடத்த நினைத்தால் காங்கிரஸ் தேசம் முழுவதும் வலுவடைய வேண்டும்.
காங்கிரஸ் மீண்டு எழ வேண்டும்... அதற்கு திமுகவை பிடித்து தொங்குவதை நிறுத்த வேண்டும்.... தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கட்சி பணியை விட திமுகவிற்கு செம்பு தூக்கும் வேலையை சரியாக பண்ணுறாங்க... இவர்களை மாற்ற வேண்டும்.