“மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்ற வேண்டும்” - வெங்கய்ய நாயுடு

“மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்ற வேண்டும்” - வெங்கய்ய நாயுடு

“மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்ற வேண்டும்” - வெங்கய்ய நாயுடு
Published on

மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்றுவது கட்டாயமாக்கப்படவேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னை தனக்கு இரண்டாம் வீடு போன்றது என்று கூறி தமிழிலில் அனைவரையும் வரவேற்றார். பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிய வெங்கய்ய நாட்டின் மிக முக்கியத் தேவைகளில் மருத்துவமும் ஒன்று என கூறினார். 

நாட்டில் மிக சொற்ப அளவிலான மக்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு கிடைத்திருப்பதாக கூறிய வெங்கய்ய நாயுடு மக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதில் தனியார் மருத்துவமனைக்ள் பங்காற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைவருக்கும் மருத்துவம் குறைந்த விலையில் கிடைக்க மருத்துவமனைகள் பணியாற்றவேண்டும் என வலியுறுத்தினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com