மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்: ஒபிஎஸ்சை சாடிய வெற்றிவேல் எம்எல்ஏ

மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்: ஒபிஎஸ்சை சாடிய வெற்றிவேல் எம்எல்ஏ
மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்: ஒபிஎஸ்சை சாடிய வெற்றிவேல் எம்எல்ஏ
Published on

வேதளாம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் மீது வெற்றிவேல் எம்எல்ஏ புகார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏ வெற்றிவேல், யாரோ நான்கு பேர் வாழ்வதற்காக ஜெயலலிதா காப்பாற்றிய கட்சியை நடுரோட்டில் நிற்க வைத்து சந்தி சிரிக்க வைக்கிறார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள தவறுகளை மறைக்க யாரிடமோ மண்டியிடுகிறார்கள். எங்களுக்கு மடியில் கணம் கிடையாது. எனவே யாரிடமும் நாங்கள் மண்டியிடப் போவதும் கிடையாது என்று கூறினார்.

நேற்று அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது பற்றிக் கருத்த் தெரிவித்த வெற்றிவேல், அமைச்சராக இருந்தால் இரண்டு கொம்பு முளைத்து விடுமா? 30 பேர் கலந்து கொண்டால் கேபினட் மீட்டிங் வேண்டுமானல் நடத்த முடியும். கட்சி தொடர்பாக எப்படி விவாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இரண்டு அணியும் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு குறித்த தகவலையும் வெற்றிவேல் மறுத்தார். ஓபிஎஸ் பேட்டியை பார்த்தேன். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது தெரிகிறது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. நீதி விசாரணை நடத்துவேன் என கூறுகிறார். இது அனைத்து அதிமுக தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? ஜெயலலிதா உடன் கடைசி வரை இருந்தது யார்? ஜெயலலிதா வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அழைப்பில்லாமல் செல்வோம். அழைப்பு வந்தால் செல்வது என்பது வேறு. இப்போது பேசுபவர்கள் எல்லாம் எத்தனை முறை எத்தனை பேர் காலில் விழுந்தனர் என்பதை கண்களால் பார்த்துள்ளேன்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தான் இருக்க வேண்டும். துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தான் இருக்க வேண்டும். அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றில்லை. தொண்டர்கள் கூட அனைத்தையும் பேச உரிமை உண்டு. முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உள்துறையை கவனித்துள்ளார். தூங்குபவர்களை எழுப்ப முடியும். ஆனால் தூங்குபவர்கள் மாதிரி நடிப்பவர்களை எழுப்புவது கடினம் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பொறுப்பை கேட்கிறார். பொதுப்பணித்துறை உள்ளிட்ட 6 அமைச்சர் பதவியை கொடுத்தால் நிபந்தனையற்று இணைவதாக கூறுகிறார் என்று வெற்றிவேல் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் மீதான வழக்குககள் குறித்து கேட்டபோது, வழக்குகளை தினகரன் சட்டரீதியாக சந்திப்பார். கட்சி அவருக்கு துணை நிற்கும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com