கால்நடை உதவி மருத்துவர் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்

கால்நடை உதவி மருத்துவர் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
கால்நடை உதவி மருத்துவர் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
Published on

திருத்தணியில் கால்நடை உதவி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருத்தணி அருகே பாலாபுரத்தில் மகன்தாலிகாபுரம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை உதவி மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டரை மாதங்களாக பணியாற்றி வந்த அவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள அறையில் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் சிவாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, சிவாவின் தற்கொலைக்கு திருத்தணி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மகேந்திரன்தான் காரணம் என சிவாவின் சகோதரர் குற்றஞ்சாட்டினார். அரசுத் திட்டங்களை விரைந்து முடிக்கக் கோரியும் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கவும் சிவாவை மகேந்திரன் கட்டாயப்படுத்தியதாக அவர் புகார் தெரிவித்தார். 

இதனால் கடந்த ஒருவாரமாக சிவா மன உளைச்சலில் இருந்ததாக சிவாவின் சகோதரர் தெரிவித்தார். இதற்காக மகேந்திரனை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் திருத்தணி - சோளிங்கர் சாலையில் மறியல் செய்தனர். மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவள்ளூர் மண்டல கால்நடை உதவி பெண் மருத்துவர்கள் உட்பட 75க்கும் மேற்பட்டோர் திடீர் விடுப்பு எடுத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com