தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழக மாவட்டங்கள் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது