காதில் பூ வைத்து கொண்டு வந்து ஒருவர் விநோதமாக போராடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் கூறி, சமூக ஆர்வலர் ஒருவர் காதில் பூவை சுற்றிக் கொண்டு வந்து மனு அளித்தார். மணிகண்டன் என்ற அந்த நபர் டாஸ்மாக், குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக இதுவரை 20 மனுக்களை குறை தீர்ப்புக் கூட்டத்தில் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், மேலும் வெறுமனே மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றும் வேலையில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். ஆகவே அதனைக் கண்டித்து காதில் பூ சுற்றிக்கொண்டு மனு அளிப்பதாக தெரிவித்தார்.