“என் வீட்டிலும் குரங்குத்தொல்லை”- வெங்கையா நாயுடு வருத்தம்
டெல்லியில் குரங்குத் தொல்லை அதிகம் இருப்பதாகவும் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் மாநிலங்களவையில் எம்பிக்கள் வலியுறுத்தினர்.
தனது வீட்டில் காயப்போட்டிருந்த துணிகளை குரங்குகள் தூக்கிச் சென்று விடுவதாகவும், செடிகளை பிடுங்கி எறிந்து விடுவதாகவும் இந்திய தேசிய லோக்தள உறுப்பினர் ராம்குமார் கஷ்யப் கவலை தெரிவித்தார். குரங்குத்தொல்லை காரணமாக நாடாளுமன்றத்தில் முக்கிய கூட்டம் ஒன்றிற்கு எம்பி ஒருவர் தாமதமாக வந்ததாகவும் அவர் கூறினார்.
இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதைக்கேட்ட மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, தனது இல்லத்திலும் கூட குரங்குத்தொல்லை உள்ளதாக கவலை தெரிவித்தார். டெல்லியில் குரங்கு பிரச்னைக்கு தீர்வுக் காண ஏதாவது செய்யுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் விஜய் கோயலை வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.