காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் 4 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக கொரோனா நோயத் தொற்றில் இருந்து பொதுமக்கள் அனைவரும் விடுபெற வேண்டி இன்று கிராம தேவதை ஸ்ரீ வஞ்சி அம்மனுக்கு நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் 20 ரூபாய் 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படாததால் வெளியில் இருந்தபடியே வழிபாடு செய்தனர்.