ரூ.1 கோடியில் எம்ஜிஆருக்கு கோவில் - அடிக்கல் நாட்டிய பக்தர்கள்
காட்பாடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எம்ஜிஆருக்கு கோவில் கட்டு பணிக்கு எம்ஜிஆர் பக்தர்கள் அடிக்கல் நாட்டினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ரகுபதி நகர் பகுதியில் ராமச்சந்திரா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் எம்ஜிஆர் பக்தர்கள் இணைந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு கோவில் கட்ட முடிவெடுத்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் 80 சென்ட் நிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திரளான எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்
இதில், ஸ்ரீ சக்தி வராஹி குருஜி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இந்த கோவில் வரும் ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும், இதில் எம்ஜிஆர் வெங்கல சிலை பிரதிஷ்டை செய்யப்படும், மேலும் அருகில் ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதில் அனைவருக்கும் இலவசமாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த வழங்கப்படும்.
ஜனவரி மாதத்தில் கட்டி முடிக்கப்படும் இந்த கோவிலை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைப்பார்கள்; என குழுவினர் தெரிவித்தனர்.