தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வங்கிகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும், விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே கிருஷ்ணகிரி ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது வேலூர் மாவட்டமும் தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து ஆணை பிறப்பித்திருக்கிறது.