திருச்செந்தூரில் இன்று வேல்யாத்திரை நிறைவு: ம.பி. முதல்வர் பங்கேற்கிறார்

திருச்செந்தூரில் இன்று வேல்யாத்திரை நிறைவு: ம.பி. முதல்வர் பங்கேற்கிறார்
திருச்செந்தூரில் இன்று வேல்யாத்திரை நிறைவு: ம.பி. முதல்வர் பங்கேற்கிறார்
Published on

பாரதிய ஜனதா நடத்திய வேல்யாத்திரை திருச்செந்தூரில் இன்று நிறைவு பெற உள்ளது. நிறைவு விழாவில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் நவம்பர் 6-ஆம் தேதி வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் அறுபடை வீடு உள்ளிட்ட ஊர்களில் வேல்யாத்திரை நடைபெற்றது. இந்த நிலையில், திருச்செந்தூரில் வேல்யாத்திரை இன்று நிறைவடைகிறது. இதற்காக, திருச்செந்தூருக்கு சென்றிருந்த எல்.முருகன், வேல் யாத்திரையில் வைக்கப்பட்டிருந்த 3 அடி கொண்ட ஐம்பொன் வேலை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், வேல்யாத்திரை நிறைவு நிகழ்ச்சி இன்று திருச்செந்தூரில் நடைபெறுவதாகவும், அரசின் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு, இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேல்யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com